Headlines

இலங்கையில் மோசமான வானிலை: கடந்த 72 மணித்தியாலங்களில் 46 பேர் பலி! – மொத்தம் 56 பேர் உயிரிழப்பு, 21 பேரைக் காணவில்லை!

கொழும்பு, நவம்பர் 28: இலங்கையில் தொடர்ந்து நிலவும் மோசமான வானிலை காரணமாக கடந்த 72 மணித்தியாலங்களுக்குள் 46 இறப்புகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

நவம்பர் 16 முதல் இன்று வரை பதிவான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது என்றும், 21 பேர் காணாமல் போயுள்ளதாகவும் DMC தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நிலவும் கடுமையான வானிலை காரணமாக இதுவரை 12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக DMC தெரிவித்துள்ளது.

மேலும், நான்கு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 666 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *