கொழும்பு, டிசம்பர் 10: இன்று (10) நாட்டின் பல மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
முக்கிய வானிலை விபரங்கள்:
- பலத்த மழை (100 மி.மீ. இற்கும் அதிகம்): வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
- ஓரளவு பலத்த மழை (75 மி.மீ.): மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
- பிற்பகல் மழை: நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப்பகுதிகளிலும் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் மழை பதிவாகலாம்.
- பலத்த காற்று: வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள், திருகோணமலை மாவட்டம் மற்றும் மத்திய மலைநாட்டின் கிழக்குச் சரிவுகளில் மணித்தியாலத்திற்கு (30-40) கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
- பனிமூட்டம்: சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளப் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
