Headlines

ஈராக்கில் அமெரிக்க ராணுவ எரிபொருள் நிரப்பும் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஆதரவு குழு உரிமை

பாக்தாத்,

ஈராக்கின் மேற்குப் பகுதியில் வியாழக்கிழமை அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக, ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களின் கூட்டமைப்பான ‘ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு’ (The Islamic Resistance in Iraq) குழு உரிமை கோரியுள்ளது.

இது தொடர்பாக அக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், KC-135 ரக விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது.

“எங்கள் நாட்டின் இறையாண்மை மற்றும் வான்பரப்பைப் பாதுகாக்கும் நோக்கில்” இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *