Headlines

கிரிஷ்’ திட்ட ஒப்பந்தம் தொடர்பான வழக்கு: நாமல் ராஜபக்ஷ மீதான விசாரணை ஏப்ரல் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ (Krrish) திட்ட ஒப்பந்தம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணை, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவ்துருகொட முன்னிலையில் இன்று (19) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

விசாரணையின் போது, பிரதிவாதியான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததாக செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *