Headlines

சிங்கப்பூரில் அறுவை சிகிச்சை: முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பினார்

கொழும்பு: சிங்கப்பூரில் அறுவை சிகிச்சை முடிந்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை (09) இலங்கை வந்தடைந்துள்ளார்.

சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அவர் கடந்த மார்ச் 15 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றிருந்தார்.

சிங்கப்பூருக்குச் செல்வதற்கு முன்னர், அவர் இலங்கையிலும் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தார் என்றும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

முன்னதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தவிசாளர் வஜிர அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் வெற்றிகரமான அறுவை சிகிச்சையை மேற்கொண்டதை உறுதிப்படுத்தியிருந்தார்.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர், அவர் சில நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *