Headlines

சிறு, நடுத்தர தொழில்களுக்கு 3% வட்டி வீதத்தில் கடன்! – அமைச்சரவை அங்கீகாரம்!

கொழும்பு, டிசம்பர் 11: அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை (MSMEs) மீட்டெடுப்பதற்காகவும், அவற்றைப் புனரமைப்பதற்காகவும் 3% வட்டி வீதத்தில் கடன் வழங்கும் புதிய திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

திட்டத்தின் விபரங்கள்:

  • புதிய பெயர்: இந்தத் திட்டம் ‘RE–MSME PLUS’ மற்றும் ‘RE–MSME – Disaster Relief’ (அனர்த்த நிவாரணக் கடன்) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • ஒருங்கிணைப்பு: ஏற்கனவே நடைமுறையில் உள்ள ‘SMILE – III’ (கைத்தொயில் மற்றும் உற்பத்தித் துறை), ‘E – FRIEND – II’ (சுற்றாடல் நேய நிதியிடல்) மற்றும் அரச நிதியுதவி பெறும் ‘RE – MSME’ ஆகிய கடன் திட்டங்களை ஒருங்கிணைத்து இந்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • பயனாளிகள்: இதன் மூலம் சுமார் 1,30,000 தொழில் முயற்சியாளர்கள் உடனடி மற்றும் நடுத்தர கால நிதியுதவிகளைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • செயற்படுத்தும் காலம்: அடுத்த ஆண்டு (2026) முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வரும்.

கடன் நிபந்தனைகள்:

  • வட்டி வீதம்: ஆண்டுக்கு 3% வட்டி.
  • கடன் தொகை:
    • நுண் தொழில்களுக்கு (Micro Enterprises) – அதிகபட்சம் ரூ. 2,50,000.
    • சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு (SME) – அதிகபட்சம் ரூ. 10,00,000.
  • திருப்பிச் செலுத்தும் காலம்: 3 ஆண்டுகள்.
  • சலுகைக் காலம் (Grace Period): அதிகபட்சம் 6 மாதங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *