கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்கரும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தருமான அதிவணக்கத்திற்குரிய இத்தபான தம்மாலங்கார மகாநாயக்க தேரர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, ஜனாதிபதி மகாநாயக்க தேரருடன் சுருக்கமான கலந்துரையாடலை மேற்கொண்டார். அரசாங்கத்தின் பணிகள் வெற்றிகரமாகத் தொடர்வதற்கு வணக்கத்திற்குரிய இத்தபான தம்மாலங்கார தேரர் ஜனாதிபதிக்குத் தமது ஆசீர்வாதங்களை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம மகா சங்க சபையின் சிரேஷ்ட கர்மவாகாச்சாரியர் அதிவணக்கத்திற்குரிய மாபலகம புத்தசிரி தேரரும் கலந்துகொண்டார்.
