கொழும்பு, டிசம்பர் 03: நவம்பர் மாதம் வீசிய ‘டிட்வா’ புயலின் தாக்கம் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட நாட்டின் 22 நிர்வாக மாவட்டங்கள், “தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள்” (National Disaster Affected Areas) எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் (Sasidevi Jaladeepan) அவர்களினால் வெளியிடப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்புகளைப் பதிவு செய்தல் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின், பகுதி II இன் 9 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய, இந்த 22 மாவட்டங்களும் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
(குறிப்பு: இந்தச் சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்படுவதன் மூலம், அனர்த்தத்தின் போது காணாமல் போனவர்கள் அல்லது உயிரிழந்தவர்களுக்கான ஆவணப்படுத்தல் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது இலகுவாக்கப்படும்.)
