கொழும்பு, டிசம்பர் 09: நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய அளவிலான மீட்பு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காக, பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய அறக்கட்டளை (Bandaranaike Memorial National Foundation) 250 மில்லியன் ரூபாவை (ரூ.25 கோடி) நிதியுதவியாக வழங்கியுள்ளது.
இதற்கான காசோலை நேற்று (08) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் கையளிக்கப்பட்டது.
அறக்கட்டளையின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் இணைந்து இந்தக் காசோலையைப் பிரதமரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.
