Headlines

நாளை ஆரம்பமாகும் 2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை! பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை (17) செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 3,545 பரீட்சை நிலையங்களில் இந்தப் பரீட்சை நடைபெறவுள்ளது. இம்முறை மொத்தம் 4,51,463 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இப்பரீட்சைகள் நாளை (17) முதல் எதிர்வரும் 2026 பெப்ரவரி 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

ஒரு மணித்தியாலத்திற்கு முன்னரே சமூகமளியுங்கள் பரீட்சார்த்திகள் பரீட்சை ஆரம்பமாவதற்கு குறைந்தது ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாகவே தத்தமது பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவுறுத்தியுள்ளார்.

மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை இதேவேளை, பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இன்றைய தினம் அமைதியாகவும், தளர்வான மனநிலையுடனும் இருக்குமாறு ராகம மருத்துவ பீடத்தின் பேராசிரியரும், சிறுவர் மற்றும் இளம்பருவ உளவியல் நிபுணருமான வைத்தியர் மியුරු சந்திரதாச ஆலோசனை வழங்கியுள்ளார். பதற்றமின்றி பரீட்சைக்குத் தயாராகுபடி அவர் மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *