கொழும்பு, பிப்ரவரி 6, 2026: பாராளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்குதல்) சட்டமூலம் அரசியலமைப்பின் எந்தவொரு விதிக்கும் முரணாக அமையவில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் இன்று (06) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் கீழ் குறித்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சபாநாயகர், இந்தச் சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் தனது தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில், பாராளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்குதல்) சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்ற முடியும் எனவும் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதாக சபாநாயகர் மேலும் சபையில் அறிவித்தார்.
