மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் (CID) நேற்றிரவு (27) கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகனப் பதிவுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணையின் அடிப்படையிலேயே இவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கப் (cab) வாகனம் ஒன்றின் சேஸி இலக்கத்தை மாற்றி, மோசடியான முறையில் வாகனத்தை பதிவு செய்ய உடந்தையாக இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ள கமல் அமரசிங்க, இன்று (28) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
