அனுராதபுரம், நவம்பர் 29: அனுராதபுரம்-புத்தளம் வீதியில் உள்ள கலாவெவ பாலத்தில் வெள்ள நீரில் சிக்கிய பேருந்தில் பயணித்த வெளிநாட்டுப் பெண் உட்பட 67 பயணிகளையும் பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக மீட்டுள்ளதாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
நேற்று (நவம்பர் 28) சுமார் 70 பயணிகளுடன் சென்ற பஸ் ஒன்று வெள்ள நீர் மட்டம் உயர்ந்ததன் காரணமாக பாலத்தில் சிக்கிக்கொண்டது.
பஸ்ஸில் இருந்த பயணிகள் அனைவரும் வெள்ளம் சூழ்ந்ததால் அருகிலிருந்த வீட்டின் கூரையின் மீது ஏறியிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் பாதுகாப்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
