நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான வானிலை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) முதல் மாறும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை விவரங்கள்:
- வறட்சியான வானிலை: நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலையே நிலவும்.
- பனி உறைபனி (Ground Frost): நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி உறைபனி உருளாவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
- பனிமூட்டம் (Misty Conditions): மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகிறது.
