கொழும்பு: பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29) காலை முன்னிலையான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், வணக்கத்திற்குரிய அத்துரலியே ரத்ன தேரர், எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
‘அபே ஜன பல கட்சி’யின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி தொடர்பில், அக்கட்சியின் செயலாளரைக் கடத்தி அச்சுறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இன்று அவர் மன்றில் ஆஜரான நிலையில், இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.