கொழும்பு, டிசம்பர் 01: அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வலயங்களில் ஆளில்லா விமானங்களை (Drones) பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை விமானப்படை (SLAF) பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
கட்டுப்பாடற்ற ட்ரோன் நடவடிக்கைகள் அத்தியாவசிய மீட்பு விமானங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று விமானப்படை எச்சரித்துள்ளது.
எனவே, அனைத்து ட்ரோன் பயன்பாடுகள் (புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல்) குறித்து 011-2343970, 011-2343971 அல்லது 115 என்ற துரித அழைப்பு இலக்கங்கள் ஊடாக முன்கூட்டியே அறிவிக்குமாறு விமானப்படை கோரிக்கை விடுத்துள்ளது.
