கொழும்பு: தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “அனைவரும் அரசியல் பேதங்களை மறந்து, ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும்” என எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரது கைதைத் தொடர்ந்து, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
ரணில் விக்ரமசிங்கவின் விடுதலைக்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளன. இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சில கட்சித் தலைவர்கள் நேற்று சந்தித்தபோது, அவர் தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார். ரணிலின் வழக்கு நாளை (26) மீண்டும் விசாரணைக்கு வரும்போது, அனைத்து எதிர்க்கட்சிகளும் கொழும்பில் ஒன்றுகூடத் திட்டமிட்டுள்ளன.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், இந்திய உயர்ஸ்தானிகரை நேற்று சந்தித்துப் பேசியதுடன், இலங்கைக்கு இன்று (25) விஜயம் செய்யும் அமெரிக்கப் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளனர். மேலும், மூன்று முக்கிய நாடுகளின் ஜனாதிபதிகள் ஐ.தே.க. பொதுச் செயலாளரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளதாகவும், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இது குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயர் இரத்த அழுத்தம் காரணமாக, ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.