அமெரிக்கக் குழுவுடன் தமிழ்க் கட்சிகள் சந்திப்பு

கொழும்பு: தமிழ் முற்போக்குக் கூட்டணி (TPA) மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) ஆகியவற்றின் பிரதிநிதிகள், இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்கக் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழுவினரை இன்று (29) கொழும்பில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக த.மு.கூ. தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குதல், நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) பரிந்துரைகளை அமுல்படுத்துதல், மற்றும் செம்மணி உள்ளிட்ட அனைத்து மனித புதைகுழிகள் குறித்தும் முறையான விசாரணைகளை நடத்துதல் போன்ற விடயங்களில் தமது நிலைப்பாடுகளை இதன்போது வலியுறுத்தியதாக, மனோ கணேசன் தனது ‘X’ சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *