நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோக்கோவிச் சற்றுத் தடுமாற்றத்திற்குப் பிறகு வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
நேற்று (27) நடைபெற்ற இப்போட்டியில், அமெரிக்காவின் சக்கரி ஸ்வஜ்தாவிடம் முதல் செட்டை 6-7 என இழந்த ஜோக்கோவிச், பின்னர் சுதாரித்துக்கொண்டு, அடுத்த மூன்று செட்களையும் 6-3, 6-3, 6-1 எனக் கைப்பற்றி வென்றார். மகளிர் பிரிவில், ஜெசிகா பெகுலா, எம்மா ரடுகானு ஆகியோர் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
இந்நிலையில், இன்று (28) நடைபெறவுள்ள இரண்டாம் சுற்றுப் போட்டிகளில் உலகின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னெர், ஸ்பெயின் நட்சத்திரம் கார்லோஸ் அல்காரஸ் மற்றும் மகளிர் பிரிவில் இகா ஸ்வியாடெக், அரினா சபலென்கா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் களமிறங்குவதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.