கொழும்பு: அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இன்று (25) காலை 8 மணி முதல் முன்னெடுக்கப்படவிருந்த நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) கைவிட்டுள்ளது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர், டொக்டர் நளின் ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளருடன் நேற்று (24) இரவு நடத்திய விசேட பேச்சுவார்த்தைகளை அடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் எழுத்துமூலம் உறுதியளித்ததன் பேரில், போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக GMOAயின் செயலாளர் டொக்டர் பிரபாத் சுகததாச தெரிவித்தார்.
இலவச சுகாதார சேவையின் சரிவைத் தடுத்தல் மற்றும் வைத்தியசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.