கொழும்பு: ஆகஸ்ட் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம், 99,406 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) தெரிவித்துள்ளது.
இதன்மூலம், 2025ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,467,694 ஆக உயர்ந்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில், வழமைபோல இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் (19,572 பேர்) வருகை தந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் சீனாவிலிருந்தும் அதிகளவானோர் வருகை தந்துள்ளனர்.
இவ்வருடத்தில் ஒட்டுமொத்தமாக, இந்தியாவிலிருந்து 268,694 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 142,347 பேரும், ரஷ்யாவிலிருந்து 117,322 பேரும் நாட்டிற்கு விஜயம் செய்துள்ளதாக அதிகாரசபையின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.