Headlines

இது அண்ணன் – தம்பி பொங்கல்!” – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்; விஜய்யின் ரியாக்ஷன் என்ன?

சென்னை, ஜனவரி 04: 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விஜய்யின் ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படங்கள் நேருக்கு நேர் மோதுவது குறித்துப் பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) முதன்முறையாக அது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

‘பராசக்தி’ இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசிய முக்கிய விடயங்கள்:

  • தேதி மோதல் ஏன்?: “பராசக்தி படத்தை ஆரம்பிக்கும் போதே பொங்கலுக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டோம். பின்னர் விஜய் சாரின் படமும் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. நான் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் தேதியை மாற்றலாமா எனக் கேட்டேன். ஆனால், ஏப்ரல் – மே மாதங்களில் தேர்தல் வருவதாலும், படத்தின் வியாபாரம் பொங்கலைச் சுற்றி இருப்பதாலும் தேதியை மாற்ற முடியாது என அவர் கூறிவிட்டார்.”
  • விஜய்யின் பதில்: “உடனடியாக நான் விஜய் சாரின் மேனேஜர் ஜெகதீஷைத் தொடர்பு கொண்டு, இது விஜய் சாரின் கடைசிப் படம், அவருக்கு இதில் வருத்தம் இருக்குமா எனக் கேட்கச் சொன்னேன். ஐந்து நிமிடத்தில் பதிலளித்த அவர், ‘விஜய் சார் உங்களுக்கு வாழ்த்துகள் சொல்லச் சொன்னார். ரிலீஸ் செய்வதில் அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை’ எனக் கூறினார்.”
  • அண்ணன் – தம்பி பொங்கல்: “33 வருடங்களாக நம்மை மகிழ்வித்த ஒருவரின் (விஜய்) கடைசிப் படத்தைக் கொண்டாட வேண்டும். அதேபோல ஜனவரி 10-ம் தேதி வரும் பராசக்தியையும் கொண்டாடுங்கள். சிலர் திட்டமிட்டு வன்மத்தைப் பரப்புகிறார்கள். ஆனால், இது அண்ணன் – தம்பி பொங்கல்,” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

பட வெளியீடு விபரம்:

  • ஜனநாயகன் (Jananaayagan): ஜனவரி 09 (இயக்கம்: எச்.வினோத்)
  • பராசக்தி (Parasakthi): ஜனவரி 10 (இயக்கம்: சுதா கொங்கரா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *