வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது அச்சுறுத்தலை நிறைவேற்றும் விதமாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை 50 சதவீதமாக இரட்டிப்பாக்கியுள்ளார். இந்த புதிய வரி விதிப்பு இன்று (27) முதல் அமலுக்கு வந்துள்ளது.
ரஷ்யாவுடனான உக்ரைன் போருக்கு மத்தியில், ரஷ்யாவிடமிருந்து இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதைத் தண்டிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப் முன்னரே தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் மற்ற நாடுகளை விட்டுவிட்டு, தங்களை மட்டும் அமெரிக்கா நியாயமற்ற முறையில் தண்டிப்பதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா பதிலடித் தீர்வைகளை விதித்தால், அமெரிக்காவின் எண்ணெய், இரசாயன மற்றும் விண்வெளிப் பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கப்படலாம்.