Headlines

இந்தியா விசா வழங்க மறுப்பு? அலி கான், சிக்கந்தர் ராசாவுக்குச் சிக்கல்! – உலகக்கிண்ணத்தைப் புறக்கணிக்க ஜிம்பாப்வே எச்சரிக்கை.

கொழும்பு, ஜனவரி 14: நடைபெறவுள்ள டி20 உலகக்கிண்ணத் கிரிக்கெட்த் தொடரில் (T20 World Cup) பங்கேற்பதற்காக இந்தியா செல்லவிருந்த பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சில வீரர்களுக்கு விசா வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க அணிக்கு அடி: அமெரிக்க அணியில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சில வீரர்களுக்கு இந்திய விசா மறுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் அமெரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான அலி கான் (Ali Khan) உள்ளடங்குவதாகவும் கூறப்படுகிறது.

ஜிம்பாப்வேயின் எச்சரிக்கை: இதற்கிடையில், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஜிம்பாப்வே அணியின் தலைவர் சிக்கந்தர் ராசாவுக்கு (Sikandar Raza) இந்திய விசா வழங்கப்படாவிட்டால், ஜிம்பாப்வே அணியும் உலகக்கிண்ணத் தொடரைப் புறக்கணிக்கும் என எச்சரித்துள்ளது.

வங்காளதேசத்தின் பிடிவாதம்: நிலைமை இவ்வாறிருக்க, வங்காளதேச கிரிக்கெட் சபை நேற்று (13) வெளியிட்ட ஊடக அறிக்கையில், உலகக்கிண்ணத் தொடருக்காக இந்தியாவுக்குச் செல்வதில்லை (Not touring India) என்ற தமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *