கொழும்பு: ‘கெஹெல்பத்தர பத்மே’ உள்ளிட்ட பாதாள உலகக் குழுவினருடன் இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பெண்ணும், சிறு குழந்தையும் நேற்று (29) மாலை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 எனும் விமானத்தில் அவர்கள் நேற்று மாலை 5.50 மணியளவில் நாட்டை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அப்பெண்ணுக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாததால், இந்தோனேசிய அதிகாரிகள் அவர்களை நாடு கடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘கொமாண்டோ சலிந்த’ உள்ளிட்ட முக்கிய பாதாள உலக உறுப்பினர்கள் தொடர்ந்து இந்தோனேசியக் காவலில் உள்ளனர்.