கொழும்பு, பெப்ரவரி 05:
இன்று (05) வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப்பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
பலத்த காற்று மற்றும் பனிமூட்டம்:
வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு சுமார் 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
பொதுமக்களுக்கான எச்சரிக்கை:
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
