கொழும்பு, பிப். 24: போர்த்துக்கலின் வெளிவிவகார அமைச்சர் பாலோ ரான்ஜெல் (Paulo Rangel), இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (24) செவ்வாய்க்கிழமை காலை நாட்டை வந்தடைந்தார்.
போர்த்துக்கல் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய நான்கு பேர் கொண்ட தூதுக்குழுவினருடன் அமைச்சர் வருகை தந்துள்ளார்.
துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானச் சேவைக்குச் சொந்தமான EK-650 என்ற விமானம் மூலம் பயணித்த இக்குழுவினர், இன்று காலை 8:35 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
விமான நிலையத்தின் விசேட விருந்தினர்களுக்கான ஓய்வறையில் (VIP lounge), இராஜதந்திரக் குழுவினரைத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் வரவேற்றனர்.
