Headlines

இலங்கை சுங்கம் வரலாற்றுச் சாதனை! – 2025ல் ரூ. 2,497 பில்லியன் வருமானம் ஈட்டி அசத்தல்.

கொழும்பு, டிசம்பர் 29: இலங்கை சுங்கத் திணைக்களம் (Sri Lanka Customs) 2025 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் 2,497 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

வருமான விபரங்கள்:

  • இலக்குத் தகர்ப்பு: 2025 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப வருமான இலக்காக 2,115 பில்லியன் ரூபா நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது நவம்பர் மாதமே எட்டப்பட்டதால், இலக்கு 2,231 பில்லியன் ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டது. தற்போது அந்தத் திருத்தப்பட்ட இலக்கையும் தாண்டி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
  • கடந்த ஆண்டு: கடந்த ஆண்டுக்கான வருமான இலக்கு 1,531 பில்லியன் ரூபாவாக மட்டுமே இருந்தது. ஆனால் இம்முறை வாகன இறக்குமதி அனுமதிக்கப்பட்டதால் இலக்கு அதிகரிக்கப்பட்டது.
  • காரணம்: சுங்கத் திணைக்களம் மேற்கொண்ட பல்வேறு உள்ளக நடவடிக்கைகள் மற்றும் வாகன இறக்குமதியின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமையே இந்த பாரிய வருமான அதிகரிப்புக்குக் காரணம் எனச் சுங்கப் பேச்சாளர் சந்தன பஞ்சிகேவா (Chandana Punchihewa) தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *