முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, இன்று (10) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
நாட்டில் இளைஞர் கழகங்கள் மற்றும் மன்றங்கள் தொடர்பில் தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலை குறித்து அவர் தனது நிலைப்பாட்டை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தை நிறுவுவதில் முன்னோடியாக இருந்தவர் என்ற வகையில், அதன் ஆரம்பகால நோக்கங்கள் மற்றும் தனது ஆட்சிக்காலத்தில் இளைஞர் தொடர்பான விடயங்கள் எவ்வாறு கையாளப்பட்டன என்பது குறித்தும் அவர் கருத்து தெரிவிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.