இஸ்ரேலின் அதி ரகசிய அணு உலை அமைந்திருக்கும், அந்நாட்டின் அணு ஆயுதக் கிடங்கு என நம்பப்படும் நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. தெற்கு இஸ்ரேலில் உள்ள நெகேவ் பாலைவனத்தின் டிமோனா (Dimona) நகருக்கு அருகில், அணு உலையைக் கொண்டுள்ள ஷிமோன் பெரெஸ் நெகேவ் அணு ஆராய்ச்சி மையம் (Shimon Perez Negev Nuclear Research Centre) அமைந்துள்ளது.
ஏவுகணைகள் குடியிருப்பு கட்டிடங்கள் மீது தாக்கியதில், <strong>டிமோனாவில் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</strong> பலர் உயிரிழந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உள்ளன. <strong>தெற்கு இஸ்ரேலிய நகரமான அராட் (Arad) பகுதியிலும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.</strong>
அன்று அதிகாலை <strong>நட்டான்ஸ் (Natanz)-ல் உள்ள தங்களது அணு உலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே டிமோனா மீதான இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.</strong> இருப்பினும், நட்டான்ஸ் அணு உலை தாக்கப்பட்ட போதிலும், அங்கிருந்து <strong>கதிரியக்கக் கசிவு எதுவும் ஏற்படவில்லை</strong> என்று ஈரானின் அணுசக்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஈரானின் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், “எதிரி மீண்டும் ஒரு மறக்க முடியாத பாடம் பெற்றுள்ளார். டிமோனா பகுதி மீதான ஏவுகணைத் தாக்குதல் மீண்டும் ஒரு தெளிவான செய்தியை அனுப்பி உள்ளது: ஈரானின் ஏவுகணைகளில் இருந்து எந்தப் பகுதியும் பாதுகாப்பானது அல்ல. காலம் கடந்துபோவதற்கு முன் எதிரி சரணடைய வேண்டும்,” என்று கூறப்பட்டுள்ளது.
ஈரானின் அண்மைக்கால ஏவுகணைத் தாக்குதல்களால் ஐக்கிய அரபு அமீரகத்திலும் (UAE) பலர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன இருப்பினும், நூற்றுக்கணக்கான ஏவுகணைகளைத் தடுத்து நிறுத்தியதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
