வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பிற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று (15) அலாஸ்கா புறப்பட்டுச் சென்றார். புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் உக்ரைனுக்காகப் பேச அங்கு செல்லவில்லை. ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்குக் கொண்டு வருவதே எனது இலக்கு” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் உக்ரைன் போருக்கு மத்தியில், ட்ரம்ப் மற்றும் புடின் இடையிலான இந்தச் சந்திப்பு நாளை (16) நடைபெறவுள்ளது.
இந்தச் சந்திப்பில், போரை முடிவுக்குக் கொண்டுவர புடின் சம்மதிக்காவிட்டால், ரஷ்யா கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இந்தியா மீது தாம் விதித்த வரிகளே, ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு வர சம்மதிக்க வைத்ததாகவும் ட்ரம்ப் முன்னதாகக் கூறியிருந்தார்.