கொழும்பு, நவம்பர் 14: இன்று (நவம்பர் 14) உலக நீரிழிவு தினம் அனுஷ்டிக்கப்படுவதையொட்டி, இலங்கை நீரிழிவு சம்மேளனம் நாளைய தினம் (நவம்பர் 15) ஒரு சமூக சேவை நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
நாளைய தினம் காலை 6.30 மணிக்கு கொழும்பு பொது நூலக வளாகத்தில் இருந்து நீரிழிவு குறித்த விழிப்புணர்வு நடைபயணம் (awareness walk) ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கூடுதலாக, காலை 7.30 மணி முதல் கொழும்பு மாநகர சபை மைதானத்தில் சுகாதார முகாம் உள்ளிட்ட தொடர்ச்சியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
அனைத்து நடவடிக்கைகளும் இலவசமாக மேற்கொள்ளப்படும் என இலங்கை நீரிழிவு சம்மேளனம் தெரிவித்துள்ளது.
