(பி.ப. 03:02) நாட்டின் சுற்றுலாத்துறை மற்றும் உள்நாட்டுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விமான நிலைய அபிவிருத்தி குறித்த முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
“ஹிங்குரங்கொடை, சிகிரியா மற்றும் திருகோணமலை ஆகிய உள்நாட்டு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கும், அத்துடன் யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்குமாக 1,000 மில்லியன் ரூபா (Rs. 1,000 million) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,” என ஜனாதிபதி தனது பாதீட்டு உரையில் அறிவித்தார்.
இந்த நிதி ஒதுக்கீடு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குமான இணைப்பை வலுப்படுத்துவதோடு, சுற்றுலாப் பயணிகளின் பயணங்களை இலகுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
