கொழும்பு: “அடக்குமுறைக்கு எதிராக” என்ற தொனிப்பொருளில் எதிர்க்கட்சிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக, கொழும்பு 2 மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சூழவுள்ள பல வீதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று (26) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, அவருக்கு ஆதரவாகவும், அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதனால், குறித்த வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள், முடிந்தால் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.