இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco) இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தத்தை அறிவித்துள்ளது.
இதன்படி, ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 277 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 292 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 95 ஒக்டேன் பெற்றோல், சுப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட புதிய விலை விபரங்கள் வருமாறு:
- 92 ஒக்டேன் பெற்றோல் – ரூ. 292 (2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது)
- ஓட்டோ டீசல் – ரூ. 277 (2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது)
- 95 ஒக்டேன் பெற்றோல் – ரூ. 340 (மாற்றமில்லை)
- சுப்பர் டீசல் – ரூ. 323 (மாற்றமில்லை)
- மண்ணெண்ணெய் – ரூ. 182 (மாற்றமில்லை)
இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) விலைத் திருத்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து, லங்கா ஐஓசி (LIOC) நிறுவனமும் இன்று (31) நள்ளிரவு முதல் தமது எரிபொருள் விலைகளைத் திருத்தியமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
