வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெராவின் இறுதி ரந்தோலி பெரஹெரா இன்று (08) இரவு 6:51 மணிக்கு கம்பீரமாக நடைபெறவுள்ளது.
ஜூலை 30இல் ஆரம்பித்த இத்திருவிழா, 9 நாட்கள் வீதியில் வலம் வந்து, இன்று 10வது நாளில் உச்சக்கட்டத்தை எட்டுகிறது என தியவடன நிலமே தெரிவித்துள்ளார்.
பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக விசேட ரயில் சேவைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வீதித் தடைகள், சோதனைகள், வாகன நிறுத்தங்கள், ட்ரோன் தடை உள்ளிட்ட திட்டங்கள் அமலில் உள்ளன.
அலங்கரிக்கப்பட்ட யானைகள், பாரம்பரிய நடனங்கள், தீக்கழி நிகழ்வுகள், இசைக் குழுக்கள் ஆகியவை பெரஹெராவை அலங்கரிக்கின்றன.
ஓகஸ்ட் 9ஆம் திகதி நீர்வெட்டும் விழாவுடன் 2025 எசல பெரஹெரா நிறைவடைகிறது.