இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தகவலின் படி, வாகன உரிமையாளர்கள் நாளை (19) முதல் ஒற்றை – இரட்டை இலக்கத் தகடு முறைமையின் கீழ் எரிபொருளைக் கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
நாளை முதல், வாகனங்களுக்கான எரிபொருள் விற்பனை ஒற்றை மற்றும் இரட்டை எண்களின் அடிப்படையிலான சுழற்சி முறைமையில் மேற்கொள்ளப்படும் என CPC தலைவர் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ், பூஜ்ஜியம் மற்றும் இரட்டை எண்களைக் கொண்ட இலக்கத் தகடுகளை உடைய வாகனங்கள், இரட்டை எண்களைக் கொண்ட திகதிகளில் எரிபொருளைக் கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படும்.
அதேபோல், ஒற்றை எண்களைக் கொண்ட இலக்கத் தகடுகளை உடைய வாகனங்கள், ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகளில் எரிபொருளைக் கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படும் என CPC குறிப்பிட்டுள்ளது.
