இலங்கையின் தெற்கு கடற்பரப்பான தொண்ட்ரா (Dondra) பகுதியில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சுமார் 123 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று (15) கடலில் வைத்து கைப்பற்றப்பட்ட இந்த பல நாள் மீன்பிடி படகு, இன்று டிக்கோவிற்ற மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு சோதனையிடப்பட்டது. இதன்போது, 6 சாக்குகளில் அடைக்கப்பட்டிருந்த 123 ஹெரோயின் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
300 கோடி ரூபா பெறுமதி கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருள் தொகுதியின் சந்தைப் பெறுமதி சுமார் 300 கோடி ரூபாவிற்கும் (Rs. 3 Billion) அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக படகில் இருந்த 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பேருவளையில் மற்றுமொரு படகு முற்றுகை இதேவேளை, பேருவளை கடற்பரப்பில் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பல நாள் மீன்பிடி படகையும் கடற்படையினர் இன்று சுற்றிவளைத்துள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார். அந்த படகு தற்போது கரைக்கு கொண்டு வரப்பட்டு வருவதாகவும், அதில் உள்ள போதைப்பொருளின் அளவு குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 7 பல நாள் மீன்பிடி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
