Headlines

கட்டார் ஏர்வேஸ் நாளை 29 சிறப்பு விமானங்களை இயக்குகிறது: கொழும்பு உட்பட முக்கிய நகரங்களுக்கான விவரம்

கட்டாரின் வான்பரப்பு இன்னமும் மூடப்பட்டிருந்தாலும், தோஹா மற்றும் உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களுக்கு இடையே கட்டார் ஏர்வேஸ் நிறுவனம் இயக்கி வரும் சிறப்பு விமானங்களின் எண்ணிக்கையை கடந்த வார இறுதியில் இருந்து மெதுவாக அதிகரித்து வருகிறது.

இதன்படி, நாளை வியாழக்கிழமை (மார்ச் 12) கட்டார் ஏர்வேஸ் 29 விமானங்களை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இவற்றில் 15 விமானங்கள் தோஹாவிலிருந்து புறப்படவுள்ளதுடன், 14 விமானங்கள் தோஹாவை வந்தடையவுள்ளன.

நாளை வியாழக்கிழமை, கட்டார் ஏர்வேஸ் தோஹாவிலிருந்து பின்வரும் நகரங்களுக்குப் பறக்கும்:

  • கொழும்பு
  • கைரோ
  • காசாபிளாங்கா
  • ஜொஹன்னஸ்பர்க்
  • சாவ் பாலோ
  • நியூயார்க்
  • பிராங்க்பர்ட்
  • மாட்ரிட்
  • லண்டன்
  • பெய்ஜிங்
  • மும்பை
  • புது டெல்லி
  • இஸ்லாமாபாத்
  • ஜகார்த்தா
  • மணிலா

அதேபோல், பின்வரும் நகரங்களில் இருந்து தோஹா நோக்கி விமானங்கள் இயக்கப்படும்:

  • கைரோ
  • டல்லாஸ்/ஃபோர்ட் வொர்த்
  • லண்டன் ஹீத்ரோ
  • பாரிஸ்
  • மாட்ரிட்
  • ரோம்
  • புது டெல்லி
  • ஜித்தாஹ்
  • மஸ்கட்
  • ஹொங்கொங்
  • சியோல்
  • பாங்காக்
  • கோலாலம்பூர்
  • மெல்பேர்ன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *