கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 11) 10 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும்.
நிட்டம்புவ முதல் மினுவங்கொட வரையான பிரதான நீர்க் குழாயில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக சபை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்படும் பிரதேசங்கள்
- ரன்பொகுணகம
- படலிய
- அத்தனகல்ல
- பஸ்யால
- நிட்டம்புவ
- கந்தஹேன
- மாபாகொல்ல
- கொங்கஸ்தெனிய
- பின்னகொல்லவத்த
- கொலவத்த
- கோரகதெனிய
- ரன்பொகுணகம வீட்டுத் திட்டம்
- உரபொல
- திக்கந்த
- மீவிட்டிகம்மன
- மைம்புல
- மதலான
- ஹக்கல்ல
- அலவல
- கலல்பொல
- எல்லமுல்ல
எனவே, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், தமக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
