Headlines

கரையோரப் புகையிரத சேவைகளில் தாமதம்: இலங்கை புகையிரத திணைக்களம் அறிவிப்பு

கொழும்பு கோட்டைக்கும் வெள்ளவத்தைக்கும் இடையிலான கரையோரப் புகையிரதப் பாதையில் சிக்னல் அமைப்பை மேம்படுத்துவதற்கான அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, இன்றும் (31) நாளையும் (01) சுமார் 15 நிமிடங்கள் வரை புகையிரதங்கள் தாமதமாகப் புறப்படக்கூடும் என இலங்கை புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலதிகமாக, மேல் மற்றும் கீழ் நோக்கிச் செல்லும் புகையிரதங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இந்தப் பராமரிப்புப் பணிகளின் நோக்கமாகும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு இலங்கை புகையிரதத் திணைக்களம் வருத்தம் தெரிவிப்பதுடன், இந்தக் காலப்பகுதியில் பொதுமக்களின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *