கொழும்பு: கொழும்பு பேராயர், அதி வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் உறுப்பினர்கள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை நேற்று (20) காலை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர்.
தமது மும்முறை ஆண்டுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்து கர்தினால் அவர்கள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தார். கத்தோலிக்க திருச்சபைக்குள் தற்போது உருவாகிவரும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளையும் ஆயர்கள் இதன்போது ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.
கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர், ஆயர் ஹெரால்ட் அண்டனி பெரேரா தலைமையில் ஆயர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.