திருகோணமலை, முத்து நகர் பகுதி விவசாயிகள், தமது காணிப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கோரி, இன்று (14) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜன அரகலய இயக்கத்துடன் இணைந்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம் காரணமாக, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து, ஜனாதிபதி செயலகத்தின் ஒரு நுழைவாயில் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், பாதுகாப்பிற்காக சிறப்பு அதிரடிப் படையினரும் வரவழைக்கப்பட்டனர்.