கொழும்பு: காணி மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல், எதிர்வரும் ஆகஸ்ட் 25ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மஹர நீதவான் நீதிமன்றில் இன்று (18) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கிரிபத்கொடவில் உள்ள அரசுக்குச் சொந்தமான காணி ஒன்றை, போலியான ஆவணங்களைத் தயாரித்து தனியார் ஒருவருக்கு விற்பனை செய்ததாக இவர் மீதும் மேலும் நால்வர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.