கொழும்பு, டிசம்பர் 24: கிறிஸ்துமஸ் பண்டிகை, பாடசாலை விடுமுறை மற்றும் வருட இறுதி நீண்ட வார விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக மேலதிக ரயில் சேவைகளை முன்னெடுக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
விசேட ரயில் பயண விபரங்கள்:
- மருதானை – மாத்தறை: இன்று (டிசம்பர் 24) பிற்பகல் 3.00 மணிக்கு மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி விசேட கடுகதி ரயில் ஒன்று இயக்கப்படவுள்ளது.
- மாத்தறை – கொழும்பு கோட்டை: டிசம்பர் 29ஆம் திகதி அதிகாலை 5.00 மணிக்கு மாத்தறையிலிருந்து புறப்படும் விசேட ரயில், காலை 8.30 மணியளவில் கொழும்பு கோட்டையை வந்தடையவுள்ளது.
- கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை: கோட்டை மற்றும் காங்கேசன்துறை இடையிலான நகரிடை கடுகதி ரயில் (Intercity Express) டிசம்பர் 25 மற்றும் 28 ஆகிய திகதிகளில் இயக்கப்படவுள்ளது.
இந்த விசேட சேவையில் ஒன்பது குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு பெட்டிகள் (Air-conditioned first-class carriages) இணைக்கப்படும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
