கொழும்பு, ஆகஸ்ட் 13
சிறைச்சாலை சுகாதார சேவைகளின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ரணசிங்கவை, எதிர்வரும் ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இன்று (13) உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கைதி ஒருவரை, தொடர்ந்தும் அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை பெற வைப்பதற்காக, குறித்த அதிகாரி 15 இலட்சம் ரூபாய் (1.5 மில்லியன்) லஞ்சம் கோரியதாகவும், அதில் 3 இலட்சம் ரூபாயை முன்பணமாகப் பெற்றுக்கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கிலேயே அவர் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.