கொழும்பு: குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) இன்று (22) கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், CID அதிகாரிகளால் அவர் நீதிமன்ற வளாகத்திற்குக் கொண்டுவரப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.