கொழும்பு, டிசம்பர் 30: 2026-ம் ஆண்டு புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக நாளை (31) கொழும்பு காலி முகத்திடல் (Galle Face) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குப் பெருமளவான மக்களும் வாகனங்களும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்படக்கூடிய நெரிசலைக் குறைக்கப் பொலிஸார் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டத்தை அறிவித்துள்ளனர்.
முக்கிய அறிவிப்புகள்:
- பாதுகாப்பு: இதற்காக சுமார் 1,200 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
- போக்குவரத்து மாற்றம்: கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித் தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் கறுவாத்தோட்டம் ஆகிய பகுதிகளில் வழக்கம் போல் போக்குவரத்து இயங்கும். ஆனால், கடும் நெரிசல் ஏற்பட்டால் மட்டும், காலி முகத்திடல் வீதி மற்றும் பாலதக்ச மாவத்தை (Baladaksha Mawatha) பகுதிகளில் விசேட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும்.
- எச்சரிக்கை: நடைபாதைகளிலோ அல்லது போக்குவரத்துக்கு இடையூறாகவோ வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வாகன தரிப்பிட வசதிகள் (Parking): கொழும்புக்கு வரும் சுமார் 5,900 வாகனங்களுக்குத் தரிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இலவச வாகன தரிப்பிடங்கள்:
- பாலதக்ச மாவத்தை (MOD Car Park – ஏரியை நோக்கி).
- கொள்ளுப்பிட்டி / பம்பலப்பிட்டி / வெள்ளவத்தை மரைன் டிரைவ் (Marine Drive).
- டி.ஆர். விஜேவர்தன மாவத்தை (கோட்டை & மருதானை).
- பார்சன்ஸ் வீதி வெளியேறும் பாதை (Parsons Road).
- காலி வீதி (சவோய் திரையரங்கம் முதல் பகடலே வீதி சந்தி வரை – Parking Bays மட்டும்).
- ஆனந்த குமாரசுவாமி மாவத்தை (இடது பக்கம்).
- எப்.ஆர். சேனாநாயக்க மாவத்தை.
- ரீட் அவென்யூ (Reid Avenue) மற்றும் சுதந்திர அவென்யூ (Independence Avenue).
- மெட்லான்ட் கிரசன்ட் (Maitland Crescent) மற்றும் பவுண்டேஷன் வீதி.
கட்டண வாகன தரிப்பிடங்கள்: பழைய மெனிங் சந்தை, விமலதர்மசூரிய மணிக்கூட்டுக் கோபுரத் தரிப்பிடம், ஹேமாஸ் கட்டடம், லேக் ஹவுஸ் தரிப்பிடம், பெஸ்டியன் வீதி (Bastion Road), பிரிஸ்டல் வீதி, டியூக் வீதி மற்றும் அக்சஸ் டவர் (Access Tower) தரிப்பிடம்.
