கொழும்பு: கொழும்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) உதித்த லியனகே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம், சிராவஸ்திபுரவில் உள்ள விகாரை ஒன்றில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், அவரது மனைவி உள்ளிட்ட எட்டுப் பேர் கடந்த ஆகஸ்ட் 15ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர். அந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகவே பிரதிப் பொலிஸ் மா அதிபர் உதித்த லியனகே கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.