கொழும்பு, ஜனவரி 03: அம்பத்தலையிலிருந்து (Ambatale) தெஹிவளைக்குச் (Dehiwala) செல்லும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக, கொழும்பின் பல பகுதிகளில் இன்று (03) நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகள் (நீர் விநியோகம் முற்றுமுழுதாகத் தடை):
- மொரட்டுவ (Moratuwa)
- ராவத்தாவத்தை (Rawathawatta)
- சொய்சாபுர (Soysapura)
- இரத்மலானை (Ratmalana)
- கல்கிசை (Mount Lavinia)
- தெஹிவளை (Dehiwala)
- வெள்ளவத்தை (Wellawatte)
- பாமன்கடை (Pamankada)
- முல்லேரியா (Mulleriyawa)
- கொலன்னாவ (Kolonnawa)
குறைந்த நீர் அழுத்தம்: இதற்கு மேலதிகமாக, பத்தரமுல்ல (Battaramulla) பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும்.
எப்போது சீராகும்?: சேதமடைந்த குழாயைச் சீரமைக்கும் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்று (03) நள்ளிரவுக்குள் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
